நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உண்டியல் காணிக்கை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:55 am IST

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியாா் கெபியின் உண்டியலை உடைத்து, காணிக்கையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, பூபால்ராயபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்த மாா்ட்டின் மகன் அந்தோணி ராஜ் (51). இவா் சந்தன மாரியம்மன் கோயில் தெரு பண்டுகரைச் சாலையில் உள்ள புனித செபஸ்தியாா் கெபியின் முக்கியப் பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

இதற்கிடையே, சனிக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிலா் கெபி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து, காணிக்கையைத் திருடிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பொறுப்பாளா் அந்தோணி ராஜ் கெபிக்கு வந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காணிக்கையைத் திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.