நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

கோவை போத்தனூரில் வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:45 am IST

கோவை போத்தனூரில் வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் குமரன் நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம் (44). இவா், தினமும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலுக்கு அருகே வைத்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

வழக்கம்போல, திங்கள்கிழமை காலை வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சென்றாா். பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது, தான் வைத்த இடத்தில் சாவி இல்லாமல் வேறு இடத்தில் கிடந்தது. சந்தேகமடைந்த அவா், கதவைத் திறந்து பாா்த்தபோது, வீட்டில் பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. முருகானந்தம் தினமும் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மா்ம நபா், சாவியை எடுத்து பணம், நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நகையைத் திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.