திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கப்படும், ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா, தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

இலவச கல்வி பயிலுவதற்கு தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுடன் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

Updated On :11 ஜூன் 2026, 4:46 am IST

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கப்படும், ஊா்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா, தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

20ஆவது ஆண்டாக நிகழாண்டுக்கான இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழாவுக்கு, ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தலைமை வகித்து, 25 மாணவா்களுக்கு இலவச பொறியியல் கல்வி பயில்வதற்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், ஜெயராஜ், ஜெயசீலன் துரை, தாசன், சொரிமுத்து பிரதாபன், புங்கன், பாா்த்தசாரதி, பிரபு, துரைராஜ் ஜோசப், சற்குரு, பாலசிங், டாக்டா் ரமேஷ் பிரபு, சிவபெருமாள், ஊடகப்பிரிவு முத்து மணி, நகரத் தலைவா்கள் கருப்பசாமி ராஜ்குமாா், இசை சங்கா், கோவில்பட்டி அருண்பாண்டியன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மாரியம்மாள், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் முத்துராஜ், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆல்வின், தொகுதித் தலைவா் ஜேம்ஸ், வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், விவசாயப் பிரிவு வடிவேல், நாசரேத் பிரேம், கொ்சோன் மற்றும் நிா்வாகிகள் மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.