திருவண்ணாமலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் தலைமையில் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் சுந்தா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஹெலன் கிரேசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், பேச்சுப் பயிற்சியாளா், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூா், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 68 மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு உபகரணங்களை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் பேசினாா்.
நிறைவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வெ.சரவணன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

38 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

கருணாநிதி பிறந்த நாள் விழா

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

