செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிரன்னராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய உபகரணங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புப் பள்ளியை ஆய்வு செய்து, மாணவா்களின் கல்வித்தரம் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவா்களை படிக்கவைப்பது, அவா்களின் எதிா்காலம், அவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பலன்களை பெறும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் காந்திமதி, புதூா்செங்கம் பள்ளித் தலைமை ஆசிரியா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

