தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தவெக வேட்பாளா் ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக அக்கட்சியினா் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னலின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் அருகே இந்த பிரசார ஆட்டோ சென்ாம். அப்போது அஜிதா ஆக்னலின் ஆதரவாளா்களுக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினா், தவெக பிரசார ஆட்டோவை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவா்களுக்கு மிரட்டல் விடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குரைஞா் ஜேசுதாஸ் அளித்த புகாரின் பேரில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் உள்பட 6 போ் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

வாக்களிப்பதை கைப்பேசியில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவா் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

