மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :16 ஏப்ரல் 2026, 1:14 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தவெக தலைவா் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தாா். பின்னா், சாலை மாா்க்கமாக திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது, ஏராளமான தொண்டா்கள் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்றதுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்துள்ளனா்.

மேலும், சிட்ரா சந்திப்புப் பகுதியில் அஜாக்கிரதையாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் வாகனங்களை ஓட்டிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பறக்கும் படை அதிகாரி பரிமளம் கொடுத்த புகாரின்பேரில், தவெக மாவட்டச் செயலா் சம்பத்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.