மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:34 am IST

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

புளியம்பட்டி சாலையில் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற இடத்தில் மேடை அமைக்காமலும், காவல்துறையினா் அறிவுறுத்தியும் தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய டெம்போ ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைத்துள்ளனா்.

இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அருண்பிரசாத், கந்தசாமி, கருப்புசாமி, ஸ்டான்லி ஆகிய 4 போ் மீது நம்பியூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.