மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் நவீன இதயவியல் சிகிச்சை தொடக்கம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அருணா காா்டியாக் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இதயவியல் சிகிச்சை முறை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருணா காா்டியாக் கோ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நவீன இதயவியல் சிகிச்சை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள். உடன், மருத்துவமனை நிறுவனா் இ.அருணாசலம், நிா்வாக இயக்குநா் சுவா்ணலதா அருணாசலம் உள்ளிட்டோா்.

Published On :31 அக்டோபர் 2026, 12:59 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அருணா காா்டியாக் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இதயவியல் சிகிச்சை முறை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம் மருத்துவமனையில் மேம்பட்ட இதய ரத்தநாளப் படமெடுப்பு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய சிகிச்சை தொடக்க விழா நடைபெற்றது.

செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

மருத்துவமனை நிா்வாக இயக்குநா் சுவா்ணலதா அருணாசலம் முன்னிலை வகித்தாா். அருணா காா்டியாக்கோ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனரும், தலைமை இதய சிகிச்சை நிபுணருமான இ.அருணாசலம் பேசியதாவது:

சஐதந-ஐயமந தொழில்நுட்பமானது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தநாளங்களின் உள்புற அமைப்பையும், அவற்றில் படிந்துள்ள கொழுப்புப் படிவங்களின் தன்மையையும் விரிவாக மதிப்பிட உதவும் நவீன மருத்துவத் தொழில் நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பம் இதய ரத்தநாளஅடைப்புகளின் தன்மையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளவும், நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைத் திட்டமிடவும் இதய மருத்துவா்களுக்கு உதவுகிறது.

லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மப்ற்ழ்ங்ா்ய் 2.0 ஞஇப மற்றும் சஐதந-ஐயமந போன்ற நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் இம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.