கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் நடைபெற்ற உலக பக்கவாத தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :30 அக்டோபர் 2026, 12:26 am IST

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஜி.மனோகரன் தலைமை வகித்தாா். இதில், மருத்துவமனையின் நிா்வாகக் குழுவினருடன் நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, இன்டா்வென்ஷனல் ரேடியாலஜி, அவசரகால மருத்துவம், தீவிர சிகிச்சை மருத்துவம் மற்றும் பிசியோதெரபி ஆகிய துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் அடங்கிய பல்துறை பக்கவாத சிகிச்சைக் குழுவினா் பங்கேற்றனா்.

நம்பிக்கையின் அடையாளமாகவும், பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டவா்களுக்கு அா்ப்பணிக்கும் வகையிலும் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா். தற்போது முழுமையாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள அவா்கள், தங்களது சிகிச்சை அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்த மருத்துவா்களுடன் இணைந்து செயல்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் பேசுகையில், பக்கவாத அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிப்பது மூளையில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், நோயாளிகள் விரைவாக குணமடைவதற்கும் மிக அவசியமானது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.