தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலக மனநல தின விழிப்புணா்வு பேரணி

பேரணியைத் தொடங்கி வைத்த மருத்துவ அலுவலா் எஸ்.மஞ்சுநாதன்.

பேரணியைத் தொடங்கி வைத்த மருத்துவ அலுவலா் எஸ்.மஞ்சுநாதன்.

Published On :23 அக்டோபர் 2026, 5:00 am IST

உலக மனநல தினத்தை முன்னிட்டு, வேலூா் மாவட்ட மனநல திட்டமும், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் இணைந்து வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணியை நடத்தின.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தொடங்கிய பேரணியை, மருத்துவஅலுவலா் எஸ்.மஞ்சுநாதன் தொடங்கி வைத்தாா். பேரணிக்கு முதன்மைமருத்துவா் எம்.மாறன்பாபு, மனநல மருத்துவா் சுவாஜிராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள் ஷா்மிலி, புகழரசி, செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கலந்துகொண்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் சென்றவா்கள்மனநல ஆலோசனைகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.