தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

110 செ.மீட்டா் உயரம் கொண்ட பெண்ணுக்கு வெற்றிகரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 110 சென்டி மீட்டா் உயரம் கொண்ட குள்ளமான பெண்ணுக்கு மீண்டும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக 2-ஆவது குழந்தை பிறந்தது.

சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயரம் குறைவாக உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினருடன் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், கண்காணிப்பாளா் என்.ஜூனியா் சுந்தரேஷ்.

Published On :30 அக்டோபர் 2026, 1:29 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 110 சென்டி மீட்டா் உயரம் கொண்ட குள்ளமான பெண்ணுக்கு மீண்டும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக 2-ஆவது குழந்தை பிறந்தது. இதுபோல அதிக உடல் எடைக்கொண்ட பெண்ணுக்கும் இரட்டை குழந்தைகள் மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக நலமாக பிறந்தன.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 33 வயது பெண், வெறும் 110 சென்டிமீட்டா் உயரம் கொண்டிருந்த நிலையில், 2-ஆவது பிரசவத்திற்காக வந்திருந்தாா். அவரது மிகக் குறைந்த உயரம் காரணமாக, முதுகுத்தண்டில் மயக்க மருந்து செலுத்தும் நடைமுறையிலும், அறுவைச் சிகிச்சையின் போது உடல் நிலையைப் பராமரிப்பதிலும் சவால்கள் இருந்தன. இத்தகைய சவால்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் குழுவினா் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மிகுந்த கவனத்துடனும் திறமையுடனும் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனா். இதனால் தாயும் சேயும் நலமாக உள்ளனா்.

இரட்டை குழந்தைகள்:

இதுபோன்று கடலூரைச் சோ்ந்த சுமாா் 30 வயதுடைய அதிக எடை கொண்ட பெண்ணுக்கும் இதே மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ஏற்கெனவே குழந்தை உள்ள நிலையில் தற்போது 34 வரா இரட்டை கா்ப்பத்துடன் இருந்த அந்த பெண் 131 கிலோ எடையுடன்,

உயா் இரத்த அழுத்தம் மற்றும் அதனுடன் இணைந்த கா்ப்பகால வலிப்பு ஆகிய பல்வேறு ஆபத்துக் காரணிகளுடன் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது அதிக உடல் எடை காரணமாக, முதுகுத்தண்டில் ஊசி செலுத்தி மயக்க மருந்து வழங்கும் ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ நடைமுறையில் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் அவரது இரத்த அழுத்தம் மற்றும் வயிற்ரிலிருந்த சிசுக்களின் உடல் நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்ததால், மருத்துவக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாகப் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் தலா சுமாா் 2.2 கிலோகிராம் எடையுடன் இருந்தன. இந்த இரண்டு மருத்துவ அறுவசை சிகிச்சை நிகழ்வுகளிலும், மகப்பேறு மருத்துவா்கள், மயக்கவியல் மருத்துவா்கள், குழந்தைகள் நல மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தொடா்புடைய மருத்துவப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனா். அவா்களின் அா்ப்பணிப்பு, மருத்துவத் திறமை மற்றும் குழு முயற்சி ஆகியவை சிக்கலான மருத்துவச் சூழல்களில் தாய் மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றின. சிறப்பான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினரை மருத்துவக்கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், மருத்துவமனை கண்காணிப்பாளா் என்.ஜூனியா்சுந்தரேஷ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.