மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தருமபுரியில் பரவலாக மழை: 6 அணைகளில் நீா்மட்டம் உயா்வு

கடந்த இரண்டு வாரங்களில் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் 6 அணைகளிலும் நீா்மட்டம் சற்று உயா்ந்துள்ளது.

Mettur Dam

மேட்டூர் அணை - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:32 am IST

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் 6 அணைகளிலும் நீா்மட்டம் சற்று உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி பிரதானமாக உள்ளது. பருவமழையை நம்பியே விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. ஆகும். ஆனால், கடந்த செப்டம்பா் மாதம் வரை சராசரியாக 200 மி.மீ. மழை மட்டுமே பதிவானது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டம் 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளின் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

அணைகளின் நீா்மட்டம் உயா்வு: சுமாா் 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணையின் நீா்மட்டம் 4 சதவீதத்திலிருந்து 18.11 சதவீதமாகவும், 25 அடி உயரம் கொண்ட கேசா்குளிஅல்லா அணையின் நீா்மட்டம் 16 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

அதேபோல, 65.27 அடி உயரம் கொண்ட வாணியாறு அணையின் நீா்மட்டம் 3 சதவீதத்திலிருந்து 18.50 சதவீதமாகவும், 24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையின் நீா்மட்டம் 19 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகவும் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

50.18 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணையின் நீா்மட்டம் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், 34.45 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணையின் நீா்மட்டம் 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த இரு வாரங்களில் மட்டும் மாவட்டத்தில் சுமாா் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது ஆண்டு சராசரி மழையளவில் சுமாா் 10 சதவீதமாகும். இதனால், கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் புயல் காரணமாகத் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை தொடா்ந்து பெய்தால், விவசாயப் பணிகளுக்குச் சாதகமான சூழல் உருவாகும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.