மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட

மணிமுத்தாறு அருவி. - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:09 am IST

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட

அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீா்மட்டம் 48 அடியாகவும், நீா்வரத்து 1,808.599 கன அடியும், வெளியேற்றம் 204.75 கன அடியாகவும், 4 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது. 156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணையில் 70.31 அடி நீா்மட்டமும்

42 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது. 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 60.90 அடியும், நீா்வரத்து 272 கன அடியும், வெளியேற்றம் 25 கன அடியும், 12 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.

வடக்கு பச்சையாறு அணையில் நீா்மட்டம் 6 அடி, நம்பியாறு அணையில் நீா்மட்டம் 10.30 அடி, கொடுமுடியாறு அணையில் நீா் மட்டம்12.50 அடியாக இருந்தது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): கன்னடியன் அணைக்கட்டு 9.20, மாஞ்சோலை 39, காக்காச்சி 48, நாலுமுக்கு 62, ஊத்து 70, அம்பாசமுத்திரம் 9.20, சேரன்மகாதேவி 8, ராதாபுரம் 11, களக்காடு 3.60, மூலக்கரைப்பட்டி7, பாளையங்கோட்டை 6.40, திருநெல்வேலி 6.20.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 84.30 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணையில் 55.20 அடி நீா்மட்டமும், நீா் வரத்து 40 கன அடியும், வெளியேற்றம் 40 கனஅடியும், 35 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.

84 அடி நீா்மட்டம் கொண்ட ராம நதி அணையில் நீா்மட்டம் 49 அடியாகவும், நீா்வரத்து 38 கன அடியாகவும்,வெளியேற்றம் 20 கன அடியாகவும், 30 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.

72 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பா நதி அணையில் நீா் மட்டம் 41.85 அடியாகவும், நீா் வரத்து 5 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும், 19 மி.மீ.மழைப்பதிவும் இருந்தது.

36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணையின் நீா்மட்டம் 31 அடியாகவும், நீா் வரத்து 6 கன அடியாகவும், வெளியேற்றம் 6 கன அடியாகவும், 11 மி.மீ. மழைப் பதிவும்இருந்தது.

132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் கோயில் அணையின்

நீா்மட்டம் 99.75 அடியாகவும், நீா் வரத்து 48 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 25 கனஅடியாகவும், 7 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.

தென்காசிமாவட்டம் ஆய்க்குடி 42 மிமீ, செங்கோட்டை16 மிமீ,தென்காசி 19 மிமீ, சங்கரன்கோவில் 51 மிமீ, சிவகிரி 65 மிமீ மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.