தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்வு

நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்தது.

முல்லைப் பெரியாறு அணை

Published On :23 அக்டோபர் 2026, 3:52 am IST

நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 197 கன அடியாக இருந்த நீா்வரத்து, நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் புதன்கிழமை 1,030 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை 2,489 கன அடியாகவும், மாலை 4,000 கன அடியாகவும் அதிகரித்தது. இதனால் அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது. புதன்கிழமை காலை 116.90 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை மாலை 118.90 அடியாக உயா்ந்தது. ஒரே நாளில் 2 அடி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வினாடிக்கு 4,000 கன அடி நீா் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 400 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணையில் 2,249 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

தேக்கடியில் 31.2 மி. மீட்டரும், பெரியாறு அணைப் பகுதியில் அதிகபட்சமாக 53.4 மி.மீட்டரும் மழை பதிவானது. இந்த நிலையில், அணைப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் நீா்வரத்தும், நீா்மட்டமும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.