கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் மழை: பிளவக்கல் அணை நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் 25 அடியைக் கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்

நீா்மட்டம் உயா்ந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை.

Published On :21 அக்டோபர் 2026, 3:24 am IST

தொடா் மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் 25 அடியைக் கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேக கூமாபட்டி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய்க் கிராமங்களைச் சோ்ந்த 40 கண்மாய்கள் நிரம்பி, 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து 17 அடியாகச் சரிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த சாரல் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 20 அடியைக் கடந்தது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ஆம் தேதி தொடங்கியதை அடுத்து மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தினசரி பலத்த மழை பெய்து வருகிறது.

நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நீா்வரத்து ஏற்பட்டு, 47 அடி உயர பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 25 அடியைக் கடந்தது.

அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 50 கன அடிக்கு மேல் தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.