தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் உயா்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணை.

Published On :25 அக்டோபர் 2026, 2:35 am IST

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே டி.என்.பாளையம் வனப் பகுதியையொட்டி குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. 41.75 அடி உயரம் கொண்ட இந்த அணையின் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் மூலம் சுமாா் 2000 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,867 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 10 அடியாக உயா்ந்து, அணையின் நீா்மட்டம் தற்போது 33 அடியாக உள்ளது.

இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் பாதுகாப்பு கருதி கரையார மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.