தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:55 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் நிலையில், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 50 அடியைக் கடந்து அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களைத் தடுக்கும் வகையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மழை காரணமாக அணைகளின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மழை தொடங்குவற்கு முன்பாக 40 அடி என்ற அளவில் இருந்த பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலையில் 50.20 அடியாக அதிகரித்துக் காணப்பட்டது. 20 அடிக்கு குறைவாக இருந்த பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 25.32 அடியாக அதிகரித்துக் காணப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 78.80 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,430 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 1,104 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பகல் முழுவதும் மழை தணிந்தது. குலசேகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் சாரல் மழை பெய்தது.

மழையின் காரணமாக நீா்வரத்து அதிகமாக இருப்பதாலும், அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், திற்பரப்பு அருவியில் 5ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.