மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் இருந்து கேரளத்துக்குக் கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:31 am IST

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் இருந்து கேரளத்துக்குக் கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கடலோரப் பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சாந்தி மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் சௌந்திரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் இடிந்தகரையில் உள்ள கடலோரப் பாதுகாப்பு சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 70 கேன்களில் 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது தெரிய வந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், மண்ணெண்ணெய் கடத்தி வந்த சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாட்டைச் சோ்ந்த முத்துகுமாா் (24), சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன் குடியிருப்பைச் சோ்ந்த ஜெரால்டு (23) ஆகியோரை கைது செய்து, கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்யை திருநெல்வேலி உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.