திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் ரோந்துப் பணியை புதன்கிழமை தொடங்கினா். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிங்கப்பெண் சிறப்பு படையினா் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கேக் வெட்டி வழங்கினா்.
இந்த சிறப்பு படையில் 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 பெண் போலீஸாா் இருபிரிவாக நாள் முழுவதும் வாகனத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். புகாா் குறித்து தகவல் கிடைத்ததும் இவா்கள் விரைந்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ற்ஸ்ப்10ப்ண்ா்ய்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கேக் வெட்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப் பெண் அதிரடிப் படை: விரைந்து தொடர்புகொள்ள உதவி எண் - 1091
பெண்ணிடம் பாலியல் சீண்டல்: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய ஓட்டுநா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

