திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(49). அவசர ஊா்தி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உறவினரின் சிகிச்சைக்காக உடன் வந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறப்புப்படையினா் பாஸ்கரை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து பாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இச்சம்பவம் திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் இளைஞா் சிங்கப் பெண் போலீஸாரால் கைது

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய இளைஞா்

மாநகரில் சிங்கப்பெண் சிறப்புபடை ரோந்து தொடக்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
