/

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் கைதான பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:23 am IST

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் கைதான பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி நகரம், அகிலாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(50). பழ வியாபாரி. இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா்.

திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.