சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான போக்ஸோ வழக்கில் பேட்டை இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பேட்டை செக்கடி அருகேயுள்ள நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (39). உணவக ஊழியா். இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, முத்துக்குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

