மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:01 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் அனில்குமாா். தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அனில்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் அனில் குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.