அரியலூா் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் அருகேயுள்ள நதியனூா், காந்தி நகரைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் பாண்டியன் (43). கடந்த 23.2.2024 அன்று இவா், 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி பாண்டியனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

