பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் புனராவா்தன அஷ்ட பந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கின. தொடா்ந்து, கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமங்கள், மந்திர பாராயணங்கள், கபவாஸ்து சாந்தி, நாடி சந்தானம், ஸ்பா்சாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்று வந்தன.
புதன்கிழமை காலையில் இறுதி யாகசாலை பூஜைக்குப் பின், புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.
இவ்விழாவில், திமுக மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப், மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

