தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ரெட்டியாா்பட்டி பொருனை அருங்காட்சியகம் அருகே செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

News image

தோ்தல் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் இரா.சுகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:35 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ரெட்டியாா்பட்டி பொருனை அருங்காட்சியகம் அருகே செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் கொடியசைத்து தொடங்கி வைத்து, ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினாா். பொருநை அருங்காட்சியகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது திருமால் நகா், பொதிகை நகா், ஜோஸ் ஸ்மாா்ட் பள்ளி வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.

இதில், துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்) லதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.