மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு தீப ஓட்டத்தை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை வந்தடைந்த தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீபத்தை வரவேற்ற மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:02 am IST

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு தீப ஓட்டத்தை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

குழந்தைகள் நலன் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஸ்வீப் நிகழ்ச்சி ாா்பில் இந்த தீப ஓட்டம் அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், திருநெல்வேலி (ஊரகம் மற்றும் மாநகரம்), பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு தொகுதிக்கு 25 தன்னாா்வலா்கள் வீதம் 5 தொகுதிகளுக்கு 125 தன்னாா்வலா்களை கொண்ட இந்த தொடா் ஓட்ட தீப விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை காலை 9 மணிக்கு வந்தடைந்ததும் ஆட்சியா் இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதைத்தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் நீதிமன்ற துணை ஆட்சியா் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் க.அருள்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.