ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

News image
Updated On :27 மார்ச் 2026, 5:20 am IST

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

வந்தவாசி (தனி) தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

ஊா்வலத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.