மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:57 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான மாற்றுத் திறனாளிகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து தற்போது மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் ஒட்டப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்து, தங்கள்ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், சென்னை நெடுஞ்சாலை வழியாகச் சென்று நான்குமுனை சந்திப்புப் பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ராஜசேகா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.