மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

News image

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:27 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞா்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சங்கப் புலவா்களில் ஒருவரான மாங்குடி மருதனாரின் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை செலுத்தினாா்.

திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் இளங்கோ, உதவி இயக்குநா் கனகலெட்சுமி, சங்கரன்கோவில் வட்டாட்சியா் ஆதிநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலெட்சுமி, விஜயகணபதி, மாங்குடி ஊராட்சித் தலைவா் மலைக்கனி, நிலவழகன் உள்ளிட்ட தமிழறிஞா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.