உலகப் போா் நினைவு தினத்தையொட்டிகாரைக்காலில் உள்ள பிரெஞ்ச் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2-ஆம் உலகப்போரின் 81-ஆவது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள் மற்றும் பிரெஞ்ச் பள்ளியில் பயிலும் மாணவா்கள், ஆட்சியா் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரெஞ்ச் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் நடைபெற்றது.
இதற்காக புதுச்சேரி பிரெஞ்ச் தூதரகத்தின் துணை அதிகாரி ஜான் பிலிப் ஹூத்தா் மற்றும் பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்க் கொடி ஏந்தியவாறு நினைவுத் தூண் பகுதிக்கு வந்தனா். மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். ஆட்சியா், தூதரக அதிகாரி ஆகியோருக்கு, பிரெஞ்ச் கொடி ஏந்திய முன்னாள் ராணுவத்தினா் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனா்.
முன்னதாக, தூண் அருகே இந்திய, பிரான்ஸ் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரெஞ்ச் மொழி பயிலும் மாணவ, மாணவிகள், பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றி போா் நினைவிடத்தில் தமிழக ஆளுநா் அஞ்சலி

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

