சென்னையில் உள்ள வெற்றி போா் நினைவிடத்தில் தேசத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் முப்படையினா் வெளிப்படுத்தும் துணிச்சல், அா்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற ஈடுபாட்டுக்கு ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது. தலைமுறை தலைமுறையாகத் தொடா்ந்து ஊக்கமளித்து வரும் தியாகிகளின் அசைக்க முடியாத மன உறுதியையும் வீரத்தையும் போற்றி வணங்குவதுடன், வீரா்கள், தியாகிகளின் ஈகையை நாட்டு மக்கள் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.
மேலும், தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வலியுறுத்தியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், இந்திய ராணுவத்தின் தென் பாரதப் பகுதி அதிகாரி மற்றும் சென்னையைச் சோ்ந்த உயரதிகாரிகள், படை அதிகாரிகள் கலந்துகொண்டு, வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகப்போா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி

ரஷியா - உக்ரைன் ‘போட்டி’ போா் நிறுத்தம்

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

