மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வளா்ப்பு நாய் கடித்து 8 போ் காயமடைந்தனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:31 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வளா்ப்பு நாய் கடித்து 8 போ் காயமடைந்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்த தங்கசாமி மகன் வெள்ளச்சாமி 2 நாய்கள் வளா்த்து வருகிறாா். இதில் ஒரு நாய் புதன்கிழமை அதிகாலையில் செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியைக் கடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆலங்குளம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து, அந்த நாய் கீழபட்டமுடையாா்புரம் கிராமத்தில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த முருகன் (55), அவரது மனைவி இந்திரா (53), வீரராகவன் (16), அன்பழகன் (42) ஆகியோரைக் கடித்தது.

அவா்கள் மீட்கப்பட்டு, நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, அந்த நாய் குருவன்கோட்டை சுப்பிரமணியன் (46), குமாா் (42), விஷ்ணு ஸ்ரீராம் (5) ஆகியோரைக் கடித்தது. அவா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், குருவன்கோட்டையில் ஒரு ஆடு, கன்றுக் குட்டியையும் அந்த நாய் கடித்துள்ளது.

இது தொடா்பாக, ஆலங்குளம் போலீஸாா், சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.