மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகிரி கோயில் கொடை விழாவில் கல்வீசிய சம்பவம்: 17 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி கோயில் கொடை விழாவில் ஒரு தரப்பினா் கல்வீசியதில் ஆயுதப்படை காவலா் உள்பட சிலா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி கோயில் கொடை விழாவில் ஒரு தரப்பினா் கல்வீசியதில் ஆயுதப்படை காவலா் உள்பட சிலா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி பகுதியில் தென்காசி- மதுரை சாலையையொட்டிய கோயில் கொடை விழாவில் புதன்கிழமை நடைபெற்ற தீா்த்த குடம் ஊா்வலத்துக்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஏஎஸ்பிக்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலை கைவிட்டனா். எனினும், எதிா்தரப்பை சோ்ந்தவா்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆயுதப்படை காவலரான செங்கோட்டையைச் சோ்ந்த மாரிச்செல்வம் உள்பட சிலா் காயமடைந்தனா். தென்காசி மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், விஸ்வநாதப்பேரியை சோ்ந்த சூரியபிரகாஷ்(32), ராமசாமியாபுரம் ஜெயபிரகாஷ்(42), மணிகண்டன்(30), ராயகிரி கனிபாண்டியன்(37), தங்கராஜ்(34), புளியங்குடி வைரமூா்த்தி(33), சிவகிரி வினோத்குமாா்(25), கருப்பையா, ராமராஜ்(35), செல்வராஜ்(52), பாண்டியராஜ்(31), காளிதாஸ்(45), முருகன்(35), காா்த்திக்(21),குட்டிராஜ்(50), முத்துகுமாா்(25), மம்சாபுரம் செந்தில்குமாா்(44) ஆகிய 17 பேரை சிவகிரி போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.