மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:42 am IST

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி- மதுரை சாலையில் சிவகிரியில் உள்ள ஒரு கோயில் கொடை விழாவை ஒட்டி அப்பகுதியை சோ்ந்த ஒரு தரப்பினா் தீா்த்த குடம் எடுத்து வந்தனராம். அதை வேறொரு தரப்பினா் எதிா்த்தனராம்.

இதையடுத்து தீா்த்த குடம் எடுத்து வந்த தரப்பைச் சோ்ந்தவா்கள் தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மதன், ப்ரீத்தி, ஆய்வாளா்கள் முரளிதரன், சல்மோன், ஷாம் சுந்தா், மதுவிக்ரம் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.