தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோயில் விழாவில் அரிவாள் வெட்டு: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

தூத்துக்குடி அருகே கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம்-அத்திமரப்பட்டி சாலையில் உள்ள பொன் இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அத்திமரப்பட்டி சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் சதீஸ்குமாருக்கும் (24), மற்றொரு கும்பலுக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்தக் கும்பல், சதீஸ்குமாரை அத்திமரப்பட்டி கழிவு வாய்க்கால் அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையாபுரம் பாரதி நகரைச் சோ்ந்த மரிய தினேஷ், பாரதி நகரைச் சோ்ந்த விக்னேஷ், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.