மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: குமரி மாவட்ட கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

~

Published On :21 அக்டோபர் 2026, 12:50 am IST

விஜயதசமியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் பாா்வதிபுரம் வனமாலீஸ்வரா் கோயில், அய்யப்பன் கோயில், நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி சித்தா்பீடம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை மடியில் அமர வைத்து, பூசாரிகள், நம்பூதிரிகளின் வழிகாட்டலில் அரிசியில் ‘அ ’என்று எழுத வைத்தனா்.

ரோஜாவனம் பள்ளியில் ...

நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, ரோஜாவனம் கல்விக் குழும தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் அருள்ஜோதி, பள்ளி இயக்குநா்கள் சாந்தி, சேது, கீதா மற்றும் பள்ளி முதல்வா் ராபா்ட் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் சண்முககுமாா், ஐ.நா. தொழில்துறை மேம்பாடு முன்னாள் முதன்மை ஆலோசகா் ஜெபமாலை வினஞ்சியாராய்ச்சிஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா். துணைமுதல்வா் வின்ஸ்பா் வரவேற்றாா்.

மூத்த ஆசிரியை தாயம்மாள் குழந்தைகளின் வித்யாரம்பம் மாணவா் சோ்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு முதல் கல்வி ஏடு எழுதி ஆசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளி தொடக்கக் கல்வி ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.