மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

த.வெ.க. அரசைக் கண்டித்து நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வை எதிர்த்து தி.மு.க. மகளிர் அணியினர் கண்டனம் பற்றி..

DMK Women's Wing stages a protest

நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - video crop

Published On :31 அக்டோபர் 2026, 1:10 pm IST

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, கொலை - கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நெல்லை மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல். ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அவைத்தலைவர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் டி.பி.எம் மைதீன் கான், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி ஞான திரவியம், முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு த.வெ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகரச் செயலாளர் வக்கீல் தினேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் மகேஸ்வரி, மல்லிகா அருள், திவ்யா மணிகண்டன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் அனிதா, சங்கீதா சுதாகர், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அனுராதா ரவி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி சுரேஷ், தமயந்தி, தர்மன், இளைஞரணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.