தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்கள் பாதுகாப்பு, விலைவாசியைக் கண்டித்து சேலத்தில் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு..

Published On :31 அக்டோபர் 2026, 12:01 pm IST

பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வைக் கண்டித்து சேலத்தில் திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் தமிழக அரசைக் கண்டித்து, சேலத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்டை மைதானத்தில், திமுக மகளிர் தொண்டரணி மாநிலச் செயலாளர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரிசி, கீரை, காய்கறிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தவெக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல் தவெக அரசு ரீல்ஸ் அரசாகச் செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டினர்.

தமிழக முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக வெற்றிக் கழக அரசு ஈடுபடுவதாகவும் குற்றங்களைக் களைய வேண்டும் பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.