கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் அண்ணா காலனியைச் சோ்ந்தவா் முகம்மது அலி (75). இவா், புதன்கிழமை காலை திருவாரூா் -மன்னாா்குடி பிரதான சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அவரை கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸாா், முகம்மது அலியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதி முதியவா் பலி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

