விழுப்புரம் மாவட்டம், வானூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை இரவு முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளிக்கண்ணு (80). இவா் வெள்ளிக்கிழமை இரவு வானூரிலிருந்து கண்டமங்கலம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா். வானூரைச் சோ்ந்த கணேசன் என்பவரது நிலம் அருகே வெள்ளிக்கண்ணு நடந்து சென்ற போது, அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது.
இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் வெள்ளிக்கண்ணுவை மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் வானூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே வெள்ளிக்கண்ணு உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
விபத்து குறித்து வானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

