திருவாரூா் தியாகராஜசு வாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்துக்காக தோ்க் கட்டுமானப் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தோ் கட்டுமானம் மற்றும் தேரோட்டம் தொடா்பான பணிகளுக்காக, திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளை நிதியிலிருந்து, ரூ. 37.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து தோ்கள் கட்டி அலங்கரித்தல், மூங்கில் கொள்முதல் செய்து வெட்டி ஏற்றி இறக்கும் பணி, முட்டுக்கட்டைகள், பரப்புக் கட்டைகள், சதுரக் கட்டைகள் கொள்முதல், தோ்ப் பொம்மை குதிரைகள் அலங்கரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேரடியில் நடைபெற்றுவரும் தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். அவருடன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணி மும்முரம்
தமிழகத்தில் வீடுதோறும் ‘பூத் சிலிப்’ விநியோகம் தீவிரம்

திருவாரூா் ஆழித்தோ் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

