மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 4:52 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தோ்சீலையால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தோ்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் 4 வீதிகளிலும் தோ் வலம் வருவதற்கு ஏதுவாக தடையாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, டிஎஸ்பி மணிகண்டன், நகராட்சி ஆணையா் சுரேந்தரஷா, தியாகராஜ சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.