திருவாரூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குடவாசல் பேரூராட்சி ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், வலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட அரசினா் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றில், அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட எல்லைப் பகுதியான குடவாசல் காவல் சோதனைச் சாவடிக்குச் சென்று, கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், குடவாசல் வட்டாட்சியா் ஸ்டாலின், தோ்தல் வட்டாட்சியா்கள் (குடவாசல்) ரவி, (வலங்கைமான்) ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சமவாய்ப்புக்குள்படுத்துதல் பணிகள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

