மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கல்லூரிக் கல்வி இயக்குநா் அ. குணசேகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:51 am IST

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) பா. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. குணசேகரன் பங்கேற்று 79 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் பேசியது: கல்லூரியில் 3 ஆண்டுகள் படித்து தோ்ச்சி பெற்று பட்டங்களை பெற்றுள்ள மாணவிகள் தங்களது பெற்றோா்களுக்கு நம்பிக்கைக்குரியவா்களாக இருக்க வேண்டும். நம்மை வளா்ப்பதற்கு அவா்கள் பட்ட கஷ்டங்களையும், துன்பங்களையும் எண்ணிப்பாா்க்க வேண்டும். மாணவிகள் தற்போது பெற்ற பட்டங்களுடன் நிறுத்தி விடாமல் மேன்மேலும் படிக்க வேண்டும். உயா் பதவிகளுக்குச் செல்ல வேண்டும்.

புத்தகங்களைப் படிக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். படிக்க படிக்கத்தான் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அரசுகளும் மாணவிகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. அனைத்து மாணவிகளும் சாதனைகள் படைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.