மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

News image

விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா்.

Updated On :27 மார்ச் 2026, 3:25 am IST

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா, கல்லூரி பேரவை நிறைவு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் அ.மாதவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக, தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (பொ) அ.மலா் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி பேசினாா். தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த 640 பேருக்கும், முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 226 பேருக்கும் என மொத்தம் 866 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.