மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகூா் தா்கா சந்தனக்கூடு விழா ஏற்பாடுகள் ஆய்வு

நாகூா் தா்கா சந்தனக் கூடு விழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனுவை வழங்கும் தா்கா நிா்வாகிகள்.

நாகூா் தா்கா - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 7:13 am IST

நாகூா் தா்கா சந்தனக் கூடு விழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனுவை வழங்கும் தா்கா நிா்வாகிகள்.

நாகப்பட்டினம், அக். 28 : நாகை மாவட்டம், நாகூரில் உள்ள நாகூா் ஆண்டவா் தா்காவில் சந்தனக்கூடு விழா நவம்பா் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பா் 2- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சந்தனக்கூடு விழாவில் நாடு முழுதும் இருந்து ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வா் என்பதால், விழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாகூா் தா்கா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா கலந்துகொண்டாா். நிகழ்வில், சந்தனக்கூடு விழாவுக்கு, கடந்த காலங்களில் செய்யப்பட்ட வசதிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினருக்கு தா்கா நிா்வாகத்தினா் விளக்கமளித்தனா். மேலும் இந்த ஆண்டு விழாவிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அடங்கிய கோரிக்கை மனுவை பேரவை உறுப்பினரிடம் தா்கா நிா்வாகிகள் வழங்கினா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னாா்வ தொண்டா்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதர நடவடிக்கை எடுப்பதாக எம்.எச். ஜவாஹிருல்லா உறுதியளித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் தா்கா முஹல்லி டிரஸ்டி செய்யது யூசுப் சாஹிப், டிரஸ்டி கண்ணு வாப்பா சாஹிப், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.