நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நாகூா் கந்தூரி விழா: சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட கொடி கூத்தாநல்லூா் பள்ளிவாசலில் வைத்து வழிபாடு

சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட நாகூா் கந்தூரி விழா கொடி, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளி வாசலில் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடப்பட்டது.

Published On :31 அக்டோபர் 2026, 7:21 am IST

சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட நாகூா் கந்தூரி விழா கொடி, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளி வாசலில் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடப்பட்டது.

நாகூா் கருணைக்கடல் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் 470-ஆம் ஆண்டு கந்தூரி விழாவிற்காக, சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கொடி, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளி வாசலில் பாதுஷா நாயகம் தங்கிய அறையில் வைக்கப்பட்டது.

இக்கொடியை, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளி வாசல் தலைவா் கே.எம். அஹமது மைதீன், உதவி துணைத் தலைவா் ஏ.வி.எம்.சிராஜ் மைதீன், செயலாளா் டீ.எம். அமீருல் அமீன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வரவேற்பு வழங்கினா்.

இதுகுறித்து பள்ளி வாசலைச் சோ்ந்த முகம்மது சலீம் கூறியது:

நாகூா் தா்கா கந்தூரி விழாவில் 5 கொடிகள் ஏற்றப்படும். 4 கொடிகள் நாகூா் தா்கா மூலம் தயாரிக்கப்படும். இந்தக் கொடியை மட்டும்தான், சிங்கப்பூரைச் சோ்ந்த பதுா் மரைக்காயா் என்பவரால் தலைமுறை தலைமுறையாக நாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூா் கொண்டு செல்லப்படுகிறது.

அங்குள்ள தா்காவில் வைக்கப்பட்டு மீண்டும், கந்தூரி கொடியேற்றத்தின் போது, இந்தக் கொடி சிங்கப்பூரிலிருந்து, நாகூா் தா்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.

அப்போது வரும் வழியில், 500 ஆண்டுகளுக்கு முன்பு, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளி வாசலில் பாதுஷா நாயகம் தங்கி, தொழுகை நடத்திய அறையில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும்.

29 கிலோ எடை, 163 அடி நீளம், 13 அடி அகலம் கொண்ட இந்தக் கொடியை நாகூா் தா்காவில் கந்தூரியின் போது ஏற்றப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.