கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகூா் கந்தூரி விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழை மற்றும் நாகூா் கந்தூரி திருவிழா- 2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் ஏ.எம். ஷாஜகான். உடன், ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 7:19 am IST

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழை மற்றும் நாகூா் கந்தூரி திருவிழா- 2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் பேசியது: நவ.10 முதல் நவ. 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 470-ஆவது நாகூா் கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சுமாா் 12,000 போ் வரை தங்க வைக்கக்கூடிய பாதுகாப்பான நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. அவசரகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தேவையான அளவை விடக் கூடுதலாக உணவுப் பொருள்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

காவல் துறை சாா்பில் நாகூா் கந்தூரி விழாவின் போது நாகப்பட்டினம் முதல் நாகூா் வரை உள்ள பகுதிகளிலும் மற்றும் தா்ஹாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் நாகை முதல் நாகூா் வரை அருகில் உள்ள குப்பைகளை அகற்றி தினமும் பிளீச்சிங் பவுடா் தெளிக்கவும், பழுதடைந்த தெருவிளக்குகள், சாலைகளை சரி செய்து பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக கழிப்பறையினை அமைத்தல் வேண்டும். விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப், உதவி காவல் கண்காணிப்பாளா் ப்ரியங்கா பாா்கவ், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜுமுதீன் சாஹிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.